Monday 21 December 2015

மும்பையில் சேவை செய்வதில் முதன்மையாக ஒரு                                 தமிழ் பெண்மணி


          மும்பையில் சேவை செய்வதில் முதன்மையாக ஒரு தமிழ்                                       பெண்மணி - கீதா ஸ்ரீதர் 

மும்பை மட்டுங்கா பகுதியில் தனது இரு பெண் பிள்ளைகள், கணவருடன் வசித்து வரும் தமிழ் பெண் கீதா ஸ்ரீதர் அவர்கள் செய்து வரும் சமூகப்பணிகள் அளப்பரியது. அவரை எனது நட்பாக அடைந்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன். சரி திருமதி கீதா ஸ்ரீதர் அவர்கள் செய்து வரும் சேவைகள் தான் என்ன? 



கடந்த ௨௨  ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி மும்பைக்கு குடியேறிய பின்பு மும்பையில் ஒரு தனியார் பள்ளியில் பணிக்கு அமர்ந்தார் இயற்கையிலேயே குழந்தைகள் மேல் அளப்பரிய பாசம் உள்ளவரான கீதா அவர்கள் பள்ளியில் பணிக்கு அமர்ந்தது ஆச்சரியம் இல்லை, கல்விப்பணி செய்து வந்த அவருக்கு மும்பையில் சிறு சிறு குழந்தைகள் கேன்சர் நோயால் அவதிப்படுவது கண்டு மன உருகினார் அன்றில் இருந்து எங்கு குழந்தைகள் கேன்சரால் அவதிப்பட்டாலும் ஓடோடி சென்று உதவ துவங்கினார் அந்த சேவை மனப்பான்மை மென் மேலும் விரிவடைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்த ஒரு இல்லம் நோக்கி திரும்பியது அந்த இல்லத்திற்கு உதவி செய்ய துவங்கி இன்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு தேவைகளை தனது சொந்த செலவில் பூர்த்தி செய்கிறார், மட்டுமல்லாது ஞாயிறு விடுமுறை நாளன்று மட்டும் தனது கையால் தானே சமைத்து அந்த குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறார், மழை அடித்தாலும் புயல் அடித்தாலும் அவரது இந்த சேவை ஒரு நாளும் நிறுத்துவது இல்லை என்பது குறிப்பிட தக்கது.

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவதோடு நில்லாமல் மனபிறழ்வு நோய் உள்ள குழந்தைகளுக்கும் தொண்டாற்றி வருகிறார், அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தானே முன்னின்று நடத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சேவைகளை செவ்வனே செய்து வரும் இவருக்குள் சமையல் கலை திறனும் அபரிதமாய் இருக்கிறது சமையல் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி இருக்கிறார், அது குறித்து மற்றொரு தனிப்பதிவில் சொல்கிறேன்.



THANKS A LOTTT MR.VASANTH WHO WROTE ABOUT ME IAM REALLY VERY THANKFUL TO HIM .....

No comments:

Post a Comment